இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது. 

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது.

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்தது. முதலிரண்டு டி20 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று வங்கதேச அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி

வங்கதேச அணி: 

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, டௌஹிட் ரிடாய், ஷமிம் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), டன்விர் இஸ்லாம், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

இங்கிலாந்து அணி: 

ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர். 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ரோனி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 57 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 73 ரன்களை குவித்தார் லிட்டன் தாஸ். ஷாண்டோ 36 பந்தில் 47 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது.

159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் 47 பந்தில் 53 ரன்கள் அடித்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 31 பந்தில் 40 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி

16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, நடப்பு டி20 சாம்பியனான இங்கிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.