வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

நவம்பர் 3ம் தேதி முதல் டி20 போட்டி தொடங்கவுள்ள நிலையில், வங்கதேச அணி இன்று இந்தியாவிற்கு வருகிறது. வங்கதேச டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான புதிய கேப்டன்களின் தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷகிப் அல் ஹசன் தடையை அடுத்து, டி20 அணியின் கேப்டனாக மஹ்மதுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப்பிற்கு பதிலாக தைஜுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் விலகிய முகமது சைஃபுதினுக்கு பதிலாக அபு ஹைடரும் மனைவியின் பிரசவத்திற்காக இந்த தொடரிலிருந்து விலகிய தமீம் இக்பாலுக்கு பதிலாக முகமது மிதுனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வங்கதேச டி20 அணி:

சௌமியா சர்க்கார், முகமது நைம், மஹ்மதுல்லா(கேப்டன்), ஆஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், அனிமுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), அராஃபட் சன்னி, அல் அமீன் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷைஃபுல் இஸ்லாம், அபு ஹைடர் ரோனி, முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம். 

டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக மோமினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

வங்கதேச டெஸ்ட் அணி;

ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கைஸ், சைஃப் ஹசன், மோமினுல் ஹக்(கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, முகமது மிதுன், மொசாடெக் ஹுசைன், மெஹிடி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், அல் அமீன் ஹுசைன், எபாடட் ஹுசைன்.