பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் அபித் அலி ரன்னே எடுக்காமல் டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஷான் மசூத் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். அவருடன் இணைந்து கேப்டன் அசார் அலியும் சிறப்பாக ஆடிவருகிறார். 

வங்கதேச அணியின் சார்பில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது  மிதுன் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் அந்த அணியால் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேச  வீரர் அபு ஜயித் இந்த போட்டியில் படுமோசமாக, தனது அசால்ட்டுத்தனத்தால் ரன் அவுட்டானார். பாகிஸ்தான் வீரர்களே பொதுவாக ஃபீல்டிங்கில் மந்தம் மட்டுமல்லாமல் படுமோசம். ஃபீல்டிங்கில் நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்வதெல்லாம் அரிதினும் அரிது. அப்படியிருக்கையில், பாகிஸ்தான் அணி வீரரே ரன் அவுட் செய்யுமளவிற்கு அசால்ட்டாக இருந்து கேவலமாக ரன் அவுட்டானார் ஜயித். 

வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஜயித்தும் எபடாட் ஹுசைனும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஜயித் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட தயாரானார். அதை ஃபீல்டர் முகமது அப்பாஸ் பிடித்துவிட்டதால், ரன் ஓடாமல் திரும்ப கிரீஸுக்கு திரும்பினார். ஆனால் வேகமாக கிரீஸுக்குள் வராமல் அசால்ட்டாக வந்தார். அதற்குள்ளாக பந்தை நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்துவிட்டார் அப்பாஸ். அவர் ரன் செய்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் கூட அந்த பந்தை எறியவில்லை. ஆனால் அது ரன் அவுட்டானாது. அந்த காமெடியான ரன் அவுட் இதோ.. இந்த ரன் அவுட்டிற்கு முழுக்க முழுக்க பேட்ஸ்மேனின் ரன் அவுட் தான் காரணம். 
 

via Gfycat