வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடிவருகின்றனர். ஷாய் ஹோப்பும் சுனில் ஆம்ப்ரீஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினர். செம ஃபார்மில் இருக்கும் ஹோப், வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்குகிறார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆம்ப்ரீஸும் நன்றாக ஆடுகிறார். தொடக்க விக்கெட்டையே வீழ்த்த முடியாமலும் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலும் வங்கதேச பவுலர்கள் திணறுகின்றனர். 

அபாரமாக ஆடிவரும் இருவரும் அரைசதம் கடந்து களத்தில் உள்ளனர். 20.1 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி வெஸ்ட் இண்டீஸ் அணி 131 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ஹோப் 56 பந்துகளில் 68 ரன்களுடனும் ஆம்ப்ரீஸ் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.