Asianet News TamilAsianet News Tamil

#BANvsNZ 4வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்..!

4வது டி20 போட்டியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்கதேச அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
 

bangladesh beat new zealand in 4th t20 and win series
Author
Dhaka, First Published Sep 8, 2021, 7:17 PM IST

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்கதேச அணி இரண்டிலும், நியூசிலாந்து அணி ஒன்றிலும் வெற்றி பெற்றதால் 2-1 என வங்கதேசம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 4வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணியில் வில் யங் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர் ரவீந்திரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 12 ரன்களிலும், கேப்டன் லேதம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4ம் வரிசையில் ஆடிய வில் யங் மட்டும் சிறப்பாக ஆடி 46 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஆடிய அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது டக் அவுட்டோ ஆகி வெளியேறினர்.

சிறப்பாக ஆடிய வில் யங் 46 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கடைசி விக்கெட்டையும் இழந்து நியூசிலாந்து அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 94 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நயீம் 29 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ்(6), ஷகிப் அல் ஹசன்(8) மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம்(0) ஆகிய மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் மஹ்மதுல்லா 43 ரன்கள் அடித்து வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார். இலக்கு எளிதானது என்பதால் முக்கியமான வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மஹ்மதுல்லாவின் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3-1 என தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios