கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற சயத் முஷ்டக் அலி தொடருக்காக இந்தியாவின் இளம் வீரர் பிருத்வி ஷா ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சோதனையின் முடிவில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. 

பிருத்வி ஷா, இருமலுக்காக எடுக்கப்பட்ட மருந்தில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இருந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இவர் தனக்கு அறியாமல்தான் இந்த மருந்தை உட்கொண்டிருக்கிறார்.


 
இவருடைய விளக்கம் பிசிசிஐ-க்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததால், அவருக்கு பிந்தைய தேதியிட்டு 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இவருடைய தடைக்காலம் கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 15-ஆம் தேதி முடிவடைகிறது.

பிருத்வி ஷா தவிர்த்து மேலும் இரண்டு உள்ளூர் வீரர்களும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதற்காகத் தடை செய்யப்பட்டுள்ளனர்.