ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டி, மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

கேரளா அணி வெறும் 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தொடக்க வீரர் பொன்னம் ராகுல் 20 பந்துகளை எதிர்கொண்டு ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஜலஜ் சக்ஸேனா 10 ரன்களிலும், ரோஹன் பிரேம் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். சீனியர் வீரரான ராபின் உத்தப்பாவும் ஏமாற்றமளித்து வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது கேரளா. 

இதையடுத்து கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சச்சின் பேபியும் விஷ்ணு வினோத்தும் ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் ரவி கிரன் வீசிய பவுன்ஸர் ஒன்று, ரோஹன் பிரேமின் ஹெல்மெட்டுக்குள் புகுந்தது. ஹெல்மெட்டின் நெட்டுக்குள் புகுந்து உள்ளே சென்றது. பவுலரே ஓடிவந்து, அந்த பந்தை ஹெல்மெட்டுக்குள் இருந்து எடுத்துச்சென்றார். ஆனால் பேட்ஸ்மேன் ரோஹனுக்கு எந்தவித அடியும் படவில்லை. இருந்தாலும் ஃபிசியோ களத்திற்கு வந்து ரோஹன் பிரேமை பரிசோதித்துவிட்டு சென்றார். அதன்பின்னர் பேட்டிங்கை தொடர்ந்த ரோஹன் அடுத்த சில பந்துகளில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். 

பேட்ஸ்மேன் ரோஹனின் ஹெல்மெட்டுக்குள் பந்து புகுந்த சம்பவத்தின் வீடியோவை பிசிசிஐ வெப்சைட்டில் பதிவேற்றியுள்ளது.