Asianet News TamilAsianet News Tamil

31, 11 ரன்னு - டெஸ்ட் தொடரில் சொதப்பும் பாபர் அசாமை கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள் - ஓய்வுக்கான நேரமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் தொடர் தோல்வி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 16 இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காததால், சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Babar Azam Shows his Worst Performance against Bangladesh in 2nd Test Match, he may Retire from Test rsk
Author
First Published Sep 2, 2024, 8:48 PM IST | Last Updated Sep 2, 2024, 8:48 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் தொடர்ந்து தடுமாறி வருகிறார். ராவல்பிண்டியில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவரால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் 77 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்த பாபர், இரண்டாவது இன்னிங்ஸில் 18 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Crucial ஆன நேரத்தில் அணியை hold செய்யாமல், பாபர் ஏமாற்றமளித்தார். முதல் டெஸ்டில் 29 வயதான அவரது ரன்கள் 0 மற்றும் 22.

Saina Nehwal Retirement: மூட்டுவலியால் அவதி – சாய்னா நேவால் விரைவில் ஓய்வு பெறலாம்!

வலது கை பேட்ஸ்மேனின் செயல்திறன் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 16 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பாபரால் அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. அவரது கடைசி அரை சதம் 2022 இன் இறுதியில் வந்தது. டெஸ்ட் சராசரி 45க்கு கீழே குறைந்துள்ளது. பாபரை மிக உயர்வாக மதிப்பிடும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், அவர் சராசரிக்கு கீழே சென்றதில் ஆச்சரியப்படுகிறார்கள். சமூக ஊடகங்களிலும் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் கேலி செய்யவும் திரும்பினர். எக்ஸ் இல் சில பதிவுகள் இங்கே...

வொயிட் வாஷை நோக்கி துரத்தும் வங்கதேசம்; தப்புமா பாகிஸ்தான்? இரண்டாவது டெஸ்டிலும் பரிதாபம்

The worrying decline of Babar Azam in Test cricket since the end of 2022 📉🫣#PAKvBAN #Pakistan pic.twitter.com/uYpwVmcasK

— Jutt news (@PakNews1855886) செப்டம்பர் 2, 2024

THE STREAK OF BABAR AZAM...!!!

- 616 days since Babar Azam last scored a Test fifty. 🤯 pic.twitter.com/06erypAtuU

— chiragmoradiya (@chiragmoradiya9) செப்டம்பர் 2, 2024

Babar Azam Struggles to Find Form in Test Series vs Bangladesh 🏏 pic.twitter.com/maOIAOwfQE

— CricketGully (@thecricketgully) செப்டம்பர் 2, 2024

Perfect 👌👌#BabarAzam Babar Azam #PAKvBAN #BANvsPAK #Pakistan pic.twitter.com/7VN5J3Nq2m

— Prakash Bhujang (@BhujangPrakash) செப்டம்பர் 2, 2024

இதற்கிடையில், இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு சுருண்டதால், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழக்கும் அபாயத்தில் உள்ளது. வங்கதேசம் வெற்றி பெற 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பார்வையாளர்கள், இப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெற தயாராக உள்ளனர். 

முன்னதாக, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 274 ரன்களுக்கு பதிலளித்து வங்கதேசம் 262 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸின் (138) சதம் மற்றும் மெஹதி ஹசன் மிராஜின் (78) அரை சதம் ஆகியவை வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஸ்கோரை எட்ட வழிவகுத்தது.

Paris Paralympics: பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios