Asianet News TamilAsianet News Tamil

கோலியின் அறிவுரை தான் என்னை முழுமையான பேட்ஸ்மேன் ஆக்கியது..! பாபர் அசாம் ஓபன் டாக்

விராட் கோலியின் அறிவுரை தான் தனது பேட்டிங்கை மேம்படுத்திக்கொள்ள உதவியதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
 

babar azam reveals that how virat kohli advice made him a better batsman
Author
Centurion, First Published Apr 15, 2021, 6:46 PM IST

விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சனை போலவே பாபர் அசாமும் 3 விதமான போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 228 ரன்களை குவித்த பாபர் அசாம், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 865 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். 857 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தார். 2017 அக்டோபர் மாதத்திலிருந்து மூன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளினார் பாபர் அசாம்.

babar azam reveals that how virat kohli advice made him a better batsman

தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் பாபர் அசாம், விராட் கோலியை போலவே சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் பாபர் அசாம். விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்பட்டது போய், இப்போது பாபர் அசாமிடமிருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுமளவிற்கு ஆகிவிட்டது. ஸ்விங் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று பாபர் அசாமிடமிருந்து கோலி கற்றுக்கொள்ள வேண்டுமென்று பாக்., முன்னாள் வீரர் அக்யூப் ஜாவேத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரை மாதிரியான ஆட்களின் கூற்றுகள் பிதற்றல் என்பதை உணர்த்தும்விதமாக, விராட் கோலியின் அறிவுரை தான் தன்னை நல்ல பேட்ஸ்மேனாக உதவியதாக கூறியுள்ளார் பாபர் அசாம்.

babar azam reveals that how virat kohli advice made him a better batsman

தனது சக வீரரான இமாம் உல் ஹக்குடனான உரையாடலில் பேசிய பாபர் அசாம், முன்பெல்லாம் வலைப்பயிற்சியில் மிகவும் அசால்ட்டாக ஆடுவேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தவறை சரிசெய்து, பயிற்சியில் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆடினேன். 

விராட் கோலியுடன் ஒருமுறை பேசும்போது, பயிற்சியை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆடுமாறு கோலி அறிவுறுத்தினார். பயிற்சியில் எளிதாக அவுட்டானாலோ, தவறான ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடினாலோ அது அப்படியே களத்திலும் எதிரொலிக்கும். எனவே பயிற்சியில் சீரியஸாக ஆடுமாறு கோலி அறிவுறுத்தினார். கோலியின் அறிவுரை எனக்கு மிகவும் உதவியது. அதன்பின்னர் பயிற்சியில் சீரியஸாக ஆட ஆரம்பித்தேன். பயிற்சியில் சரியாக ஆடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் எனக்கு அது உறுத்தலாகவே இருக்கும் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios