Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கு யாருக்கு கொடுக்கலாம்..? பாபர் அசாம் கருத்து

டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதை யாருக்கு கொடுக்கலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கருத்து கூறியுள்ளார்.
 

babar azam picks his choice of player of the tournament of t20 world cup
Author
First Published Nov 12, 2022, 10:56 PM IST

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை(நவம்பர் 13) மெல்பர்னில் இறுதிப்போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. 

இந்த டி20 உலக கோப்பைக்கான தொடர் நாயகனை தேர்வு செய்வதில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த தொடரில் சிறப்பாக ஆடிய 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. ரசிகர்களே வாக்களித்து தொடர் நாயகனை தேர்வு செய்யலாம்.

முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி

மொத்தம் 9 வீரர்களை தொடர் நாயகன் விருதுக்காக ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து அதிகபட்சமாக 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகிய மூவரும், இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இந்த 9 வீரர்களில் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறும் வீரர் தொடர் நாயகன் விருதைவெல்வார்.

இந்திய அணியில் வீரர்களின் ரோல் என்னவென்பதே தெளிவாக இல்லை.. பிறகு எப்படி ஜெயிக்கிறது..? அனில் கும்ப்ளே விளாசல்

நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாபர் அசாம், ஷதாப் கான் இந்த உலக கோப்பையில் ஆடிய விதத்திற்கு அவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கொடுக்க வேண்டும். அபாரமாக பந்துவீசினார். அவரது பேட்டிங்கும் மேம்பட்டுள்ளது. கடைசி 3 போட்டிகளில் அபாரமாக ஆடினார். ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்தார். எனவே அவரது ஆல்ரவுண்ட் செயல்பாடு அவரை தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் ஆக்கியது என்றார் பாபர் அசாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios