Pakistan T20I Captain: டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாகீன் அஃப்ரிடி நீக்கம் – மீண்டும் கேப்டனான பாபர் அசாம்!

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானின் டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாகீன் அஃப்ரிடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Babar Azam has been re-appointed as Pakistan's T20I and ODI captain ahead of the T20 Cricket World Cup 2024 rsk

இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாபர் அசாம் கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டார். மேலும், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து நாடு திரும்பியது. இதையடுத்து நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், 4-1 என்று தோல்வி அடைந்து நாடு திரும்பியது. உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அடுத்தடுத்த தொடர்களில் தோல்வி அடைந்தது.

தற்போது இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் தான் இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணீ தயாராகும் வகையில் டி20 கேப்டனை மாற்றியுள்ளது. அதன்படி, ஷாகீன் அஃப்ரிடி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர் மோஷின் நாக்வி, பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஒயிட் பால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக பாபர் அசாமை நியமித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நாக்வி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாக பாபர் அசாமை மீண்டும் நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சியாக இருக்கும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்காக நியூசிலாந்து அணியானது பாகிஸ்தான் செல்கிறது. இதைத் தொடர்ந்து அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

இதே போன்று, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios