பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியில் பாபர் அசாம், சயிம் அயுப், முகமது ஹாரிஸ் ஆகியோர் அதிரடியாக ஆடியதால் 20 ஓவரில் 242 ரன்களை குவித்து, 243 ரன்கள் என்ற கடின இலக்கை முல்தான் சுல்தான்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராவல்பிண்டியில் நடந்துவரும் இன்றைய போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெஷாவர் ஸால்மி அணி:
சயிம் அயுப், பாபர் அசாம் (கேப்டன்), ரோவ்மன் பவல், டாம் கோலர் காட்மோர், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், அர்ஷத் இக்பால்.
ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
முல்தான் சுல்தான்ஸ் அணி:
ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ரைலீ ரூசோ, டிம் டேவிட், குஷ்தில் ஷா, கைரன் பொல்லார்டு, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஷெல்டான் காட்ரெல், ஈசானுல்லா.
முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயிம் அயுப் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 134 ரன்களை குவித்தனர். சயிம் அயுப் 33 பந்தில் 58 ரன்கள் அடித்தார். காட்டடி அடித்த பாபர் அசாம் 39 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்
11 பந்தில் 4 சிக்ஸர்களுடன் முகமது ஹாரிஸ் 35 ரன்களை விளாச, டாம் கோலர் காட்மோர் 18 பந்தில் 38 ரன்கள் விளாச 20 ஓவரில் 242 ரன்களை குவித்த பெஷாவர் ஸால்மி அணி 243 ரன்கள் என்ற கடின இலக்கை முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.
