ஓய்வுபெற்ற வீரர்கள், தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகும் வர்ணனையாளர்களாக கிரிக்கெட்டிலேயே இருக்கின்றனர். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் வர்ணனையாளராக இருந்துவருகிறார். உலக கோப்பை தொடரில் ஐசிசி நியமித்த வர்ணனையாளர்களி சஞ்சய் மஞ்சரேக்கரும் ஒருவர். இந்தியாவிலிருந்து கங்குலி, மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்ளே ஆகிய மூவரும் உலக கோப்பை வர்ணனையாளர்களாக உள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும்போது ஒருதலைபட்சமாகவோ, தான் சார்ந்த நாட்டின் அணிக்காகவோ சாதகமாக பேசக்கூடாது. ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர், இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் “நமது”, “நமக்காக” என இந்திய அணியின் சார்பாக பேசியிருக்கிறார். அதை கவனித்ததால் அதிருப்தி அடைந்த ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர், ஐசிசி-க்கு கடிதம் எழுதியுள்ளார். 

சஞ்சய் மஞ்சரேக்கர் ஒருதலைபட்சமாக வர்ணனை செய்வதாக ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளார். அவரது வர்ணனை மட்டும்தான் சரியில்லை. மற்றபடி உலக கோப்பை சிறப்பாக இருக்கிறது என்று கடிதம் எழுதியுள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் ஐபிஎல்லின் போதும் மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாகவே பேசுவார் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். ஐபிஎல்லில் காட்டிய வேலையை உலக கோப்பையிலும் காட்டியுள்ளார்.

பிராந்திய மொழிகளில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்கள் சில சமயங்களில் ஓரளவிற்கு அந்த குறிப்பிட்ட மொழி, மாநிலம் அல்லது நாடு சார்ந்த அணிக்கு சாதகமாக பேசுவார்கள். ஆனால் உலகம் முழுழவதும் கவனிக்கும் ஆங்கில வர்ணனையில் ஒருசார்பாக பேசுவது சரியான செயல் அல்ல. அதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் மஞ்சரேக்கர்.