Asianet News TamilAsianet News Tamil

கடைசி டி20.. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்.. இலங்கை அணி பேட்டிங்

ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

australia won toss opt to bat against sri lanka in last t20
Author
Melbourne VIC, First Published Nov 1, 2019, 2:40 PM IST

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடிவருகிறது. 

முதல் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் ஆடிவருகிறது. சகோதரரின் திருமணத்திற்கு சென்றிருந்த மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டதால், கடந்த போட்டியில் ஆடிய ஸ்டேன்லேக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துள்ளார். 

australia won toss opt to bat against sri lanka in last t20

மனநிலை தெளிவாக இல்லை என்று கூறி தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ள மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மெக்டெர்மோட் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), ஸ்மித், மெக்டெர்மோட், அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகார், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios