உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இரு அணிகளுமே சிறந்து விளங்குவதால் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே ஆடிய அதே அணியுடன் தான் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கவாஜா காயத்தால் விலகியிருப்பதால் ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் இணைந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லயன். 

இங்கிலாந்து அணி:

ராய், பேர்ஸ்டோ, ரூட், மோர்கன்(கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்), வோக்ஸ், பிளங்கெட், ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.