உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடாத ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியில் அவர் ஆடுகிறார். ஷான் மார்ஷ் நீக்கப்பட்டு ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 

இளம் இடதுகை ஃபாஸ்ட் பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மீண்டும் ரிஸ்ட் ஸ்பின்னர் ஸாம்பா எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் நாதன் குல்டர்நைல் எடுக்கப்பட்டுள்ளார். 

வங்கதேச அணியில் சைஃபுதீன் மற்றும் மொசாடெக் ஹுசைன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சபீர் ரஹ்மான் மற்றும் ருபெல் ஹுசைன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நாதன் குல்டர்நைல், ஸ்டார்க், ஆடம் ஸாம்பா. 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா, சபீர் ரஹ்மான், மெஹிடி ஹாசன், மஷ்ரஃபே மோர்டஸா(கேப்டன்), ருபேல் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.