தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தான் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஆடி 218 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து மீண்டும் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.
பின்னர் 34 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆஸ்திரேலியா அணி விளையாடியது. வார்னர் (2), கவாஜா (3), ஸ்டீவ் ஸ்மித் (6), டிராவிஸ் ஹெட் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். லபுஷேன் 5 ரன்கள் எடுத்திருந்தார். எனினும், தென் ஆப்பிரிக்கா அணி எக்ஸ்ட்ராஸ் 19 ரன்கள் கொடுக்கவே ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று தான் கப்பா டெஸ்ட் தொடங்கியது. அதற்குள்ளாக போட்டியே முடிந்துவிட்டது.
கப்பா டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு இது சாத்தியம்!
எது எப்படியோ, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 2ஆவது இடம் பிடித்துள்ளது. கப்பா டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியைத் தழுவிய நிலையில் 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
