இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் நடக்கிறது.

இந்திய நேரப்படி 6.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியில் கடுமையாக போராடியும் கடைசி நேரத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் இங்கிலாந்தை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.

இரு அணிகளிலுமே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று நேற்றே, நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் வெளியிட்டிருந்த உத்தேச அணிகள் குறித்த கட்டுரையில் தெரிவித்திருந்தோம். அதேபோலவே இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே சமபலத்துடனும் வெற்றி வேட்கையுடனும் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.