ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

ஐம்பது சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்லனர். வெள்ளிக்கிழமை தான் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டது. தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக 2 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது. 

சிட்னியில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான சீட்டிலும் பெரும்பாலும் விற்றுவிட்டன. வெறும் 1900 சீட்டுகள் மட்டுமே மீதமாக உள்ளன.