விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

ஆனால் இந்திய அணி வீழ்த்திய அந்த ஆஸ்திரேலிய அணி, வலுவானது இல்லை. பெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய் அணி வீழ்த்தவில்லை. ஏனெனில் இந்திய அணி வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் என்ற இருபெரும் ஜாம்பவான்களும் இல்லை. ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தியது. எதுவாக இருந்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் இந்திய அணி வீழ்த்தியது சிறந்த ஆஸ்திரேலிய அணி கிடையாது. ஸ்மித்தும் வார்னரும் தடையில் இருந்ததால் அவர்கள் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. 

இப்போது ஸ்மித்தும் வார்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி முழு வலிமையுடன் எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 2 அணிகள் தான் டாப் 2 இடங்களில் உள்ளன. இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய 3 அணிகளுக்கு எதிரான தொடரையும் மொத்தமாக ஒயிட்வாஷ் செய்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 56 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை ஒயிட்வாஷ் செய்து 240 புள்ளிகளை பெற்றது. எனவே மொத்தமாக 296 புள்ளிகளை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் மட்டுமல்லாது, தற்போது லபுஷேன் என்ற ஒரு மிகச்சிறந்த வீரரும் அந்த அணிக்கு கிடைத்துள்ளார். ஸ்மித் - வார்னர் அடிக்க தவறினாலும் லபுஷேன் ஏமாற்றமளிப்பதேயில்லை. தான் ஆடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வெகு சிறப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 

நியூசிலாந்து தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் தரமான 2 அணிகளும் மோதிக்கொள்ளும் அந்த தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கும். 

இந்திய அணி, கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆனால் இந்திய அணி வீழ்த்தியது முழுமையான ஆஸ்திரேலிய அணி அல்ல. ஆஸ்திரேலிய அணி தற்போது முழு வலிமையுடன் திகழும் நிலையில், இந்திய அணிக்கு டிம் பெய்ன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய அணியின் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பேசிய டிம் பெய்ன், இப்போது எங்கள் அணி முழு பலத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பல மேட்ச் வின்னர்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் எங்கள் வீரர்கள் பன்மடங்கு மேம்பட்டுள்ளனர். 

எங்கள் அணி எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவிக்கும், இரக்கமேயில்லாத, சிறந்த அணியாக திகழ்கிறது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இப்படியொரு தரமான அணியில் ஆடுவது எனக்கு மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது இருந்த அணி அல்ல இது. இப்போது நாங்கள் முற்றிலும் வேற லெவலில் இருக்கிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் ஆடமுனையும். எனவே இந்த ஆண்டு இந்திய அணி மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் கடினமாக இருக்கும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.