இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.

முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 2வது போட்டியில் சில மாற்றங்களை செய்துள்ளது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிராத கோலி மற்றும் ஷமிக்கு பதிலாக ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றதால், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்ற வேண்டிய அவசியமில்லை; மாற்றவும் படாது. அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். எனவே அதே அணியுடன் தான் களமிறங்கும்.

ஆஸ்திரேலிய அணி:

மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நேதன் லயன்.