டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் டி20 உலக கோப்பையிலும் ஆடும்.

டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் - டேவிட் வார்னர். 3ம் வரிசையில் மிட்செல் மார்ஷ், 4ம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், 5ம் வரிசையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆகியோர் ஆடுவார்கள்.

ஃபினிஷராக க்ளென் மேக்ஸ்வெல் ஆடுவார். ஸ்பின்னராக ஆடம் ஸாம்பா ஆடுவார். அவருடன் மேக்ஸ்வெல்லும் ஸ்பின் பவுலிங் வீசுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவருடன் ஜோஷ் ஹேசில்வுட் - கேன் ரிச்சர்ட்ஸன் இருவரில் ஒருவர் ஆடுவார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் மிதவேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் அவர்களும் வீசுவார்கள்.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை ஆரம்பத்துலயே தூக்கிட்டா இந்தியாவை 70 ரன்களுக்கு சுருட்டலாம்! எதிரணியின் முன்னாள்கேப்டன் வியூகம்

ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்/கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.