பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான 14 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் தடையில் இருந்தபோது கவாஜா, மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தான் ஆஸ்திரேலிய அணியில் ஆடினர். ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் அணிக்கு திரும்பிவிட்ட நிலையில், அவர்கள் ஆடுவதால் கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லமால் கவாஜா மற்றும் ஹாரிஸ் ஆகிய இருவரும் அண்மைக்காலங்களில் சரியாக ஆடவில்லை.

இவர்கள் தவிர பீட்டர் சிடிலும் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். மைக்கேல் நெசெர் என்ற பவுலிங் ஆல்ரவுண்டர் அணியில் இடம்பிடித்துள்ளார். உள்நாட்டு போட்டிகளில் நன்றாக ஆடிய ஜோ பர்ன்ஸுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. வார்னருடன் அவரோ அல்லது பான்கிராஃப்ட்டோ தொடக்க வீரராக இறங்குவர்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பேட்டின்சன், காம்ரூன் பான்கிராஃப்ட், மைக்கேல் நெசெர்.