Asianet News TamilAsianet News Tamil

பவுலிங்கில் பட்டைய கிளப்பி ஆஸி.,யை குறைவான ஸ்கோருக்கு பொட்டளம் கட்டிய இங்கிலாந்து! இங்கி.,க்கு வெற்றி வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்து, இங்கிலாந்துக்கு 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

australia set easy target to england in t20 world cup match
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 30, 2021, 9:34 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் சிறப்பாக ஆடி, அந்த அணிகள் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ளன. 

இங்கிலாந்து அணி முதலிடத்திலும் (ரன்ரேட்டின் அடிப்படையில்), ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திலும் உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் நீயா நானா போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஆடிவருகின்றன.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டைமல் மில்ஸ்.

ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் அஷ்டன் அகார் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்களை அவ்வளவு எளிதில் ரன் அடிக்க இங்கிலாந்து பவுலர்கள் அனுமதிக்கவில்லை. ஆஸி., அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் தலா ஒரு ரன்னுக்கு முறையே கிறிஸ் வோக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகிய இருவரும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் மேக்ஸ்வெல்(6), ஸ்டோய்னிஸ்(0), மேத்யூ வேட்(18) ஆகியோர் ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்ற கேப்டன் ஆரோன் ஃபின்ச் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - நியூசிலாந்தின் இந்த ஒரு அஸ்திரத்தை ரோஹித் அடித்து காலி செய்துவிட்டால் அவர் தான் மேட்ச் வின்னர்..! வெற்றி இந்திய அணிக்கே

ஃபின்ச்சுடன் இணைந்து பின்வரிசையில் நன்றாக ஆடிய அஷ்டான் அகர் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாட் கம்மின்ஸ் 2 சிக்ஸர்களும், மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, தட்டுத்தடுமாறி ஆஸி., அணி 20 ஓவரில் 125 ரன்கள் அடித்தது.

126 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது. இது எளிதான இலக்கு என்பதால் அதிரடியான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்த இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றுவிடும். 

இதையும் படிங்க - அவரை மல்லுக்கட்டி ஆடவைக்காதீங்க.! டீம்ல வேற ஆளா இல்ல.. வதவதனு இருக்காங்க..! இந்திய அணிக்கு சல்மான் பட் அட்வைஸ்
 

Follow Us:
Download App:
  • android
  • ios