Asianet News TamilAsianet News Tamil

முடிவுக்கு வந்தது டேவிட் வார்னரின் கிரிக்கெட் சகாப்தம்; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

Australia Player David Warner has announced his retirement from T20 cricket after ODI and Test cricket sk
Author
First Published Jun 25, 2024, 4:26 PM IST | Last Updated Jun 25, 2024, 4:26 PM IST

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா பரிதாபமாக வெளியேறியது. ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இடம் பெற்று விளையாடிய வார்னர் அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டி தான் வார்னர் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. இதே போன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் கடைசியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டி தான் வார்னரது கடைசி டி20 போட்டி. இந்தப் போட்டியில் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலி உடன் உரையாடலில் ஈடுபட்டார். ஹர்திக் பாண்டியாவுடன் பேசினார். இந்த நிலையில் வார்னர் வெளியேறிய பிறகு பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் கூறியிருப்பதாவது: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இப்போது டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவர் இல்லாத கிரிக்கெட் வாழ்க்கை, நியூசிலாந்தில் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டோம். நீண்ட காலமாக இருக்கும் ஒரு வீரரை இழப்போம். ஆனாலும் நாங்கள் முன்னேறுவோம் என்று கூறியுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது மட்டுமின்றி 2021ல் டி20 உலகக் கோப்பையையும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வார்னர் வென்று கொடுத்துள்ளார். 37 வயதான வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் கிட்டத்தட்ட 19,000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios