ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது. இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் காயமடைந்த ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இந்த அணியில் இடம்பெறவில்லை.

எனவே ஆஸ்திரேலிய அணியில் முதல் முறையாக கேமரூன் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டர்களாக கேமரூன் க்ரீனும் ஹென்ரிக்ஸும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றபடி, ஃபின்ச் தலைமையிலான அணியில் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க்,  ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல், லபுஷேன் என வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), சீன் அபாட், அஷ்டான் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

ஒருநாள் தொடர்:

முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 27, சிட்னி.

2வது ஒருநாள் போட்டி: நவம்பர் 29, சிட்னி.

3வது ஒருநாள் போட்டி: டிசம்பர் 2, கான்பெரா.

டி20 தொடர்:
 
முதல் டி20 போட்டி: டிசம்பர் 4, கான்பெரா

2வது டி20 போட்டி: டிசம்பர் 6 , சிட்னி

3வது டி20 போட்டி: டிசம்பர் 8, சிட்னி.