Asianet News TamilAsianet News Tamil

Ashes Series:சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸி., அணி அறிவிப்பு! கொரோனா உறுதியான வீரருக்கு மாற்றாக தரமான வீரர் அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

australia names playing eleven combination for the sydney test of ashes series against england
Author
Sydney NSW, First Published Jan 4, 2022, 6:06 PM IST

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது.

இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் படுமோசமாக சொதப்பி படுதோல்விகளை அடைந்துவருகிறது. இங்கிலாந்து அணிக்கு நேர்மாறாக மிகச்சிறப்பாக விளையாடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. 

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்த தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றுவதற்கான அவசியமே இல்லை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவர் இந்த போட்டியில் ஆடமுடியாது. எனவே அவருக்கு மாற்று வீரராக, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான அனுபவம் வாய்ந்த உஸ்மான் கவாஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் செய்யப்படவில்லை. மெல்போர்ன் டெஸ்ட்டில் அருமையாக பந்துவீசிய போலந்த் சிட்னி டெஸ்ட்டிலும் ஆடுகிறார்.

ஆஸ்திரேலிய அணி:

மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், போலந்த்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios