ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடவுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 அணிகளும் கடந்த 26ம் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தேர்வு தான், ஐபிஎல்லை விட ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. அந்த முழு விவரத்தை பார்ப்போம்.

ஒருநாள் தொடர்:

முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 27, சிட்னி.

2வது ஒருநாள் போட்டி: நவம்பர் 29, சிட்னி.

3வது ஒருநாள் போட்டி: டிசம்பர் 2, கான்பெரா.

டி20 தொடர்:
 

முதல் டி20 போட்டி: டிசம்பர் 4, கான்பெரா

2வது டி20 போட்டி: டிசம்பர் 6 , சிட்னி

3வது டி20 போட்டி: டிசம்பர் 8, சிட்னி.

டெஸ்ட் தொடர்:
 

முதல் டெஸ்ட்: டிசம்பர் 17-21, அடிலெய்டு(பகலிரவு டெஸ்ட்)

2வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்(பாக்ஸிங் டே டெஸ்ட்)

3வது டெஸ்ட்: ஜனவரி 7-11, சிட்னி.

4வது டெஸ்ட்: ஜனவரி 15-19, பிரிஸ்பேன்.