ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலின் டி கிராண்ட்ஹோம் திடீர் ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 27.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

97 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (13) மற்றும் ஆரோன் ஃபின்ச் (1) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தாலும், அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித் (47) மற்றும் அலெக்ஸ் கேரி (26) ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். 

இதையும் படிங்க - Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

வெறும் 88 பந்தில் இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.