பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. ராவல்பிண்டி ஆடுகளம் படுமோசமாக இருந்தது. ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் ஆகிய இரண்டு விதமான பவுலிங்கிற்கும் ராவல்பிண்டி ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. எனவே அந்த ஆடுகளத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்தது. போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே அந்த ஆடுகளம், சராசரிக்கு கீழ் தரத்தில் இருந்ததாக ரிப்போர்ட் செய்தார்.

கராச்சி டெஸ்ட்:

எனவே கராச்சியில் நாளை நடக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை நல்ல ஆடுகளமாக தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் மைதான ஊழியர்களும் உள்ளனர்.

இதையும் படிங்க - India vs Sri Lanka: உன் பலத்தையே பலவீனமாக்கி பலன் அடையுறாய்ங்க.. சுதாரித்துகொள் ரோஹித்.. கவாஸ்கர் அட்வைஸ்

ரிஸ்ட் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் அறிமுகம்:

இந்த 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அறிமுக ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - India vs Sri Lanka: 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து 2 பெரிய வீரர்கள் விலகல்

28 வயதான ரிஸ்ட் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடவுள்ளார். சீனியர் ஸ்பின்னர் நேதன் லயனுடன் இணைந்து 2வது ஸ்பின்னராக மிட்செல் ஸ்வெப்சன் ஆடவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன்.