ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 15ஆவது பிங்க் டெஸ்ட் 4ஆம் தேதி தொடக்கம்!
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 15ஆவது பிங்க் டெஸ்ட் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் மனைவி ஜேன் மெக்ராத் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிட்னி கிரிக்கெட் பிங்க் டெஸ்ட் விளையாடப்படும். இந்த டெஸ்ட் விளையாட்டின் மூலம், மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டி அதனை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த பிங்க் டெஸ்டின் 3ஆவது நாள் ஆட்டம் ஜேன் மெக்ராத் தினம் என்று அழைக்கப்படும்.
ஓய்வு தேவை என்பதால், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் பங்கேற்பதில் சிக்கல்?
52 வயதான மெக்ராத் முதல் பிங்க் டெஸ்ட் போட்டியின் மூலம் 17 மில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, 15ஆவது பிங்க் டெஸ்ட் வரும் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டில் 150000 இருக்கைகளை விற்பனை செய்து அதன் மூலம் வரும் நிதியை மார்பக புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்ட 2100 குடும்பங்களுக்கு உதவும் வகையிலும் மற்றும் அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் மார்பக புற்றுநோயால் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
2ஆவது டெஸ்ட்: அதிரடி மாற்றத்தோடு களமிறங்கும் பாகிஸ்தான் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிங்க் டெஸ்ட் போட்டி தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்னே மோர்கல் கூறுகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிங்க் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கவில்லை. இதுதான் முதல் முறை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரே கூறியிருப்பதாவது: பிங்க் டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் நாங்கள் இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய கே எல் ராகுல்: வைரலாகும் புகைப்படம்!