இங்கிலாந்தை சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டரான மொயின் அலியை, ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ரெய்னா அணியில் இருக்கும்போதிலும், மொயின் அலி 3ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். 3ம் வரிசையில் இறங்கிய முதல் போட்டியிலேயே அபாரமாக ஆடிய மொயின் அலி, அதன்பின்னர் தொடர்ந்து 3ம் வரிசையிலேயே இறக்கிவிடப்பார். 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மொயின் அலி, 36 பந்தில் 58 ரன்களை விளாசி சிஎஸ்கே அணி 20 ஓவரில் 218 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார்.  இந்த சீசனில் 6 போட்டிகளில் 157.25 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 206 ரன்களை குவித்துள்ளார் மொயின் அலி.

மொயின் அலியின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட இந்திய முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா, மொயின் அலியின் பேட்டிங்கில் சயீத் அன்வரின் பேட்டிங் சாயல் இருப்பதாக தெரிவித்தார்.

மொயின் அலி மிகவும் ரிலாக்ஸான நபர். அவரது பேட்டிங், சயீத் அன்வரின் பேட்டிங்கை போல் உள்ளது. அவர் எப்போதுமே அழுத்தமாக உணர்வதில்லை. மிகவும் ரிலாக்ஸாக ஆடுகிறார். மிகச்சிறந்த வீரரான மொயின் அலியை தோனி நன்றாக பயன்படுத்துகிறார் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.