WPL 2024 Final: ஆர்சிபி மகளிர் சாம்பியன் – தலகாலு புரியாம தலைகீழாக நடந்த ஷோஃபி டிவைன்!

டெல்லி அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளி அணி முதல் முறையாக சாம்பியனான நிலையில், ஆர்சிபி வீராங்கனை தலைகீழாக நடந்து சென்றுள்ளார்.

As RCB Women's team won the WPL 2024 final against Delhi by 8 wickets to become champions, RCB player Sophie Devine walk by upside down rsk

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலமாக ஆர்சிபி முதல் முறையாக சாம்பியனானது. ஐபிஎல் தொடரில் இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஒரு சீசன்களில் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.

ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஆனால், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்சிபி அணியானது டிராபியை கைப்பற்றி சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் டிராபியை வென்ற மகழ்ச்சியில் தலகால் புரியாமல் ஆர்சிபி வீராங்கனை ஷோஃபி டிவைன் தலைகீழாக நடந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios