தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் ஓய்வு அறிவித்த பின்னர் நடந்த ஓய்வறை சம்பவ வீடியோவை பார்ப்போம். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் அவரது ஆஸ்தான வீரருமான சுரேஷ் ரெய்னாவும், சுதந்திர தினமான நேற்று, தங்களை கொண்டாடும் சென்னை மண்ணில் ஓய்வு அறிவித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருவரும் அடுத்தடுத்து ஓய்வறிவித்தது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தோனியின் கெரியர் முடிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தோனி ஓய்வு அறிவிக்க வேண்டியது மட்டுமே மிச்சமிருந்தது. அதனால் அவர் ஓய்வு அறிவித்தது கூட ஆச்சரியமில்லை. அவரைத்தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வறிவித்ததுதான் பேரதிர்ச்சி.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே இருவரும் சிஎஸ்கே அணியில் ஆடுவதால், சென்னையின் செல்லப்பிள்ளைகளாகவும், தமிழ்நாட்டு ரசிகர்களின் பாசத்திற்குரியவர்களுமான தோனியும், ரெய்னாவும், தங்களது சொந்த மண்ணிற்கு நிகராக மதிக்கும் சென்னை மண்ணில் ஓய்வறிவித்துள்ளனர். ஐபிஎல்லுக்கு தயாராகும் விதமாக, சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் இருக்கும் நிலையில் சென்னையில் வைத்தே தங்களது ஓய்வை அறிவித்தனர். 

ஓய்வு அறிவித்த பின்னர், பயிற்சி முகாமில் இருந்து திரும்பும்போது, தோனியும் ரெய்னாவும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோரும் தோனி, ரெய்னாவை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர். 

Scroll to load tweet…