சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து வருகிறார். ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முத்திரையை பதித்துவருகிறார். 

விராட் கோலியை முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது, சமகால வீரர்களும் தாறுமாறாக புகழ்ந்துவருகின்றனர். சக வீரர்கள், எதிரணி வீரர்கள் என அனைத்து தரப்புமே தன்னை பார்த்து வியந்து புகழுமளவிற்கு தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கோலி. 

இந்நிலையில், அபுதாபி டி10 லீக் தொடரில் ஆடிவரும் ஆண்ட்ரே ரசல், விராட் கோலியை வெகுவாக புகழ்ந்துள்ளார். கோலி குறித்து பேசிய ரசல், விராட் கோலி தலைசிறந்த வீரர். சில நேரங்களில் விராட் கோலியின் பேட்டிங்கை ஒரு வார்த்தையில் புகழமுடியாது. அவரது பேட்டிங்கை புகழ 10 வார்த்தைகள் தேவைப்படும். அந்தளவிற்கு அபாரமாக ஆடுவார். அவர் உண்மையான சாம்பியன். தொடர்ச்சியாக ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்து கொண்டிருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடுகிறார். 

விராட் கோலி சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். என்னுடைய பேட்டிங் டெக்னிக் எல்லாம் கிளாசிக் கிடையாது. நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தையும் முழு பவரையும் கொடுத்து அடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் எனது டெக்னிக் என்று ரசல் மிகவும் வெளிப்படையாக எதார்த்தத்தை கூறினார்.