வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ளன. அதன்பின்னர் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. 

அந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அனி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் அதிரடி ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரசல், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான ரசல், ஒரு சில ஓவர்களில் ஆட்டத்தை தலைகீழாக மாற்ற வல்லவர். அவர் கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி20 போட்டியில் ஆடினார். அதன்பின்னர் டி20 அணியில் இடம்பெறவே இல்லை. 

உலக கோப்பைக்கு பின்னர் மீண்டும் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாமல் இருந்துவந்தார். இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றுவிட்டதால், அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடுகிறார். 

டி20 அணியில் ஷாய் ஹோப் எடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் விபத்தில் சிக்கிய ஒஷேன் தாமஸுக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் இல்லை என்பதால் உடற்தகுதியுடன் இருக்கும் அவரும் டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். 

Also Read - எப்படி பேட்டிங் ஆடணும்னு கோலி புஜாராலாம் அந்த பையனை பார்த்து தெரிஞ்சுக்கங்க.. முன்னாள் ஆல்ரவுண்டர் அதிரடி
 
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி:

பொல்லார்டு(கேப்டன்), ஃபேபியன் ஆலன், ட்வைன் பிராவோ, ஷெல்டான் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ஷாய் ஹோப், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரான், ரோவ்மன் பவல், ஆண்ட்ரே ரசல், லெண்டல் சிம்மன்ஸ், ஒஷேன் தாமஸ், ஹைடன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.