Asianet News TamilAsianet News Tamil

”அஷ்வின் ஆல்டைம் கிரேட் பிளேயர்” இல்லை.. சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து குறித்து லெஜண்ட் ஆம்ப்ரூஸ் அதிரடி

ரவிச்சந்திரன் அஷ்வின்  ஆல்டைம் சிறந்த வீரர் இல்லை என்ற சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து குறித்து முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி ஆம்ப்ரூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ambrose opines on sanjay manjrekar opinion about ravichandran ashwin
Author
West Indies, First Published Jun 11, 2021, 7:03 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 300, 400 ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 286 விக்கெட்டுகள் இந்தியாவிலும், 123 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும் வீழ்த்தப்பட்டவை.

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னராக திகழும் அஷ்வினை பலரும் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர், தான் அஷ்வினை ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், அஷ்வினை ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக மதிப்பிடுவதில் எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. அடிப்படை பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் அஷ்வின், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை(ஒரு இன்னிங்ஸில்) வீழ்த்தியதில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை ஜடேஜா பெற்றிருக்கிறார். ஜடேஜாவுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தியும் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அக்ஸர் படேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் அஷ்வினை ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர் என்று மதிப்பிடுவதில் எனக்கு இருக்கும் பிரச்னை என்று மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார்.

மஞ்சரேக்கரின் கருத்துடன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் ஆகிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரண்பட்டனர். மஞ்சரேக்கரின் கருத்துக்கு அஷ்வினே கூட நக்கலாக பதிலடியும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி ஆம்ப்ரூஸ், நம் அனைவருக்குமே வெவ்வேறு கருத்துகள் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மகத்துவத்தை(greatness) மதிப்பிடுவார்கள். சஞ்சய் மஞ்சரேக்கர் அவர் ஆடிய காலத்தில் சிறந்த வீரர். அவருக்கென்று தனி பார்வை இருக்கும். ஆனால் மகத்துவத்தை எப்படி வரையறுக்கிறோம் என்பது தான் கேள்வி.

சில நேரங்களில் அதை எளிதாக எடுத்துக்கொள்வோம். என்னை பொறுத்தமட்டில், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எந்த வீரருமே ஆல்டைம் கிரேட் தான் என்று ஆம்ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios