அலெஸ்டர் குக் இங்கிலாந்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவராக திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடிய அவர், மொத்தம் 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,472 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் சச்சின், சங்கக்கரா, பாண்டிங், டிராவிட் ஆகிய நால்வருக்கு அடுத்து ஐந்தாமிடத்தில் குக் தான் இருக்கிறார். 

மிகச்சிறந்த பேட்ஸ்மேனான குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவந்த நிலையில், 2018ம் ஆண்டு அதிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஆல்டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார் அலெஸ்டர் குக். 

2004ல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் எம்சிசி அணியில் நானும் இருந்தேன். எங்கள் அணியில் சைமன் ஜோன்ஸ், மேத்யூ ஹாக்கார்டு, மின் படேல் என சிறந்த பவுலர்கள் இருந்தனர். ஆனாலும் அந்த போட்டியில் லன்ச்சுக்கும் டீ பிரேக்குக்கும் இடைப்பட்ட செசனில் பிரயன் லாரா சதமடித்தார். அது என்னை பிரமிக்கவைத்தது. அவர் மிகப்பெரிய ஜீனியஸ்.

பிரயன் லாராவை போலவே விராட் கோலியும் சிறந்த பேட்ஸ்மேன். மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். எனவே விராட் கோலியையும் தனது பட்டியலில் சேர்த்த குக், அடுத்ததாக ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், சங்கக்கரா ஆகியோரையும் தேர்வு செய்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் சங்கக்கரா இரண்டாமிடத்திலும் பாண்டிங் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஜாக் காலிஸும் அருமையான பேட்ஸ்மேன் தான். எனவே அவரும், குக்கின் ஆல்டைம் 5 பேட்ஸ்மேன்களில் இடம்பெற தகுதியானவரே. பிரயன் லாரா, சச்சின் அளவுக்கு நீண்டகாலம் மற்றும் அதிகமான போட்டிகளில் ஆடாததால், அவரிடம் பெரியளவில் ரெக்கார்டுகள் இல்லை. ஆனால் அவர் பெஸ்ட் பேட்ஸ்மேன். இந்த பட்டியலில் குக், சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்யவில்லை.