ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேர் ஆடினர். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்த்து கொள்ளப்படுவதில்லை. ஆனால் முதல் சீசனில் அக்தர், அஃப்ரிடி, சல்மான் பட், சொஹைல் தன்வீர், ஷோயப் மாலிக் உள்ளிட்ட வீரர்கள் ஆடினர். 

அக்தர், கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியில் ஆடினார். இந்நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த தருணம் குறித்தும் அந்த கொண்டாட்டம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். 

தனது யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து பேசிய அக்தர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தபோது, அந்த வெற்றியின் உற்சாகத்தில் மைதானம் முழுவதும் ஓடிய ஷாருக்கான், அந்த வெற்றியை வெகுவாக கொண்டாடினார். எனக்கு, நான் என்னவோ உலக கோப்பையையே வென்ற மாதிரி ஒரு உணர்வு. எங்களுக்காக பெரிய போட்டியை வென்று கொடுத்திருக்கிறீர்கள் என்று ஷாருக்கான் சொன்னதாக அக்தர் தெரிவித்துள்ளார். 

Also Read - வெறும் பத்தே பந்தில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மொயின் அலி.. லைவ் மேட்ச்சை ஹைலைட்ஸ் மாதிரி வீடியோ

அந்த குறிப்பிட்ட போட்டியில் கேகேஆர் அணி, சேவாக் தலைமையிலான டெல்லி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி வெறும் 133 ரன்கள் மட்டுமே அடித்தது. 137 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் சேவாக், டிவில்லியர்ஸ், மனோஜ் திவாரி மற்றும் கவுதம் கம்பீர் ஆகிய முக்கியமான 4 விக்கெட்டுகளை விரைவிலேயே சொற்ப ரன்களில் வீழ்த்தி கேகேஆர் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் அக்தர். அந்த போட்டியில் அக்தரின் அபாரமான பவுலிங்கால் டெல்லி அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்தர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

Also Read - இங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்