Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்..! அஜித் அகார்கரின் தேர்வு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை அஜித் அகார்கர் தேர்வு செய்துள்ளார்.
 

ajit agarkar picks pace bowling attack of team india for icc world test championship final
Author
Chennai, First Published Jun 5, 2021, 8:07 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்திய அணி முன்னெப்போதையும் விட இப்போது மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், நடராஜன், நவ்தீப் சைனி ஆகிய மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை அஜித் அகார்கர் தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவருமே ஆட வேண்டும் என்று அஜித் அகார்கர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios