Asianet News TamilAsianet News Tamil

IPL 2024: சிஎஸ்கே ஆதரவு ஊழியருக்கு உதவிய எம்.எஸ்.தோனி – இந்த அளவுக்கு இறங்கி வேலை செஞ்ச தோனியின் வீடியோ வைரல்!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சிஎஸ்கே ஆதரவு ஊழியருக்கு உதவி செய்த தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Ahead of IPL 2024 CSK vs RCB First match Wicket keeper MS Dhoni Helping CSK support staff at Chepauk Video goes viral rsk
Author
First Published Mar 22, 2024, 6:19 PM IST

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்று நடக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இன்னும் சற்று நேரத்தில் ஏஆர் ரஹ்மான், சோனு நிகம் ஆகியோரது இசை நிகழ்ச்சியும், அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப்பின் நடன நிகழ்ச்சியும் அரங்கேற இருக்கிறது.

இந்த நிலையில் தான், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்.எஸ்.தோனி சிஎஸ்கே ஆதரவு ஊழியருக்காக இறங்கி வேலை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் உடல் பயிற்சியாளர் கிரேக் கிங் உடன் இணைந்து கூல்டிரிங்க்ஸ் பெட்டியை தூங்கி வந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து தோனியின் மனிதநேயத்தை பாராட்டி வருகின்றனர்.

 

 

கடந்த சீசனுடன் தோனியின் கேப்டன்ஷி சகாப்தம் முடிந்த நிலையில், இந்த சீசனில் விக்கெட் கீப்பராக மட்டுமே தோனி தனது பணியை தொடங்குகிறார். இதுவரையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது 5 முறை டிராபியை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக தோனி இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகமாகிறார்.

 

 

மேலும், ஒரு கேப்டனாக சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடிய 235 போட்டிகளில் 142 போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார். மேலும், 90 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இதில் சிஎஸ்கேயின் வெற்றி சதவிகிதம் 60.42 ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios