WPL 2024 Eiminator: டெல்லி மெட்ரோ ரயிலில் ஆர்சிபி ஆர்சிபி என்று முழக்கமிட்ட ரசிகர்கள்– வைரலாகும் வீடியோ!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியானது கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

after Royal Challengers Bangalore Women beat MIW by 5 Runs difference in WPL 2024 Eliminator,  Fans chanting RCB RCB in Delhi Metro train rsk

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில், எல்லிஸ் பெர்ரி மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். 50 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆர்சிபி மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், யாஷ்ஸ்திகா பாட்டீயா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். மேத்யூஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, யாஸ்திகா 19 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் நிதானமாக விளையாடினர்.

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

இதில் நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சஜீவன் சஞ்சனா, பூஜா வஸ்த்ரேகர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த அமெலியா கெர் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுக்க ஆர்சிபி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறிய நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இறுதிப் போட்டிக்கு சென்றது. நாளை 17ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயிலில் ஆர்சிபி ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios