IPL Tamil Commentators: கிரிக்கெட் வர்ணனை பற்றி தெரியாத நீயா நானா கோபிநாத், வர்ணனையாளரா எப்படி?

இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் தொடரில் நீயா நானா கோபிநாத் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

After ICC ODI World Cup, Neeya Naana Gopinath ready to IPL 2024 Tamil Commentatory on Star Sports rsk

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடக்கவிழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், சோனு நிகம், டைகர் ஷெராஃப், அக்‌ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிலையில் தான் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், குஜராத்தி, பெங்கால் உள்ளிட்ட மொழிகளில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான முருகன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற நாராயண் ஜெகதீசனும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.

இவர்கள் தவிர, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுப்ரமணியம் பத்ரிநாத், லக்‌ஷ்மிபதி பாலாஜி, முரளி விஜய், ஆர்ஜே பாலாஜி, யோ மகேஷ், முத்துராமன், கே வி சத்தியநாராயணன், திருஷ் காமினி, பாவனா பாலகிருஷ்ணன், சஷ்திகா ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வரும் கோபிநாத்தும் ஸ்டார் ஸ்போர்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராக இடம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே கோபிநாத், இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையை தொடரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியின் சார்பில் வர்ணனையாளராக இடம் பெற்றிருந்தார். அப்போது பேசிய அவர், எனக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினார். ஆனால், சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன் உடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். மேலும், கடந்த சீசனில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வீட்டிற்கு சென்று அவரை பேட்டி கண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் எல்லாம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios