இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ளது. 3 டி20, 3ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடரில் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடக்கவுள்ளது. அதற்காக இந்திய அணி அமெரிக்கா செல்கிறது. அதனால் வீரர்களுக்கு விசாவிற்காக விண்ணப்பித்ததில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஷமிக்கு மட்டும் விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது. 

ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கால், விசா வழங்க மறுத்தது. ஆனால் இந்திய அணிக்காக ஷமி செய்த சாதனைகள், அவரது வழக்கு குறித்த விவரங்கள் ஆகியவற்றை இணைந்து அவருக்கு விசா வழங்கக்கோரி பிசிசிஐ கடிதம் எழுதியது. இதையடுத்து ஷமிக்கு விசா வழங்கப்பட்டது.