பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடிக்கு பெயர்போனவர். இவரது அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. பேட்டிங்கில் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாகவே ஆடுவார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டியவர் அஃப்ரிடி.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே இரு அணி வீரர்களுமே மிகத்தீவிரமாகவும், கூடுதல் கவனத்துடனும் ஆடுவார்கள். சில கடுமையான மோதல்களும் உரசல்களும் கூட அரங்கேறும்.

கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் கேப்டன்சியில் ஆடிய இந்திய அணிக்கு எதிராகத்தான் அஃப்ரிடி அவரது கெரியரில் அதிகமாக ஆடியுள்ளார். அப்போதைய இந்திய வீரர்களில் அஃப்ரிடிக்கு பிடிக்காதவர் என்றால் அது கம்பீர் தான். 2007 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அஃப்ரிடி - கம்பீர் மோதல் காலத்தால் அழியாதது. அந்த சம்பவத்தை குறிப்பிட்டு தனது சுயசரிதையில் கூட கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தார் அஃப்ரிடி. அதன் எதிரொலியாக கம்பீரும் அஃப்ரிடியும் அண்மையில் கூட கடும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். 

இதன்மூலம் அஃப்ரிடிக்கு பிடிக்காத இந்திய வீரர் கம்பீர் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் என்பதை அவரே தெரிவித்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு அஃப்ரிடி அளித்த பேட்டியில் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகிய மூவரும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என பதிலளித்தார். 

விராட் கோலி அஃப்ரிடிக்கு ரொம்ப நெருக்கம். ஆனால் கோலியை அஃப்ரிடி புறக்கணித்துவிட்டார்.