Asianet News TamilAsianet News Tamil

2007ல் அந்த போட்டியில் காம்பீர் வேணும்னே ஓடிவந்து என் மேல முட்டுனாரு!! 2 பேரும் மாத்தி மாத்தி திட்டிகிட்டோம்.. அஃப்ரிடி அதிரடி

2007ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அஃப்ரிடியும் காம்பீரும் மோதிக்கொண்டவது, களத்தில் நடந்த சண்டைகளில் முக்கியமான ஒன்று. 
 

afridi remained the clash between gambhir in 2007
Author
Pakistan, First Published May 3, 2019, 4:02 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 

அந்த சுயசரிதையில் தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அஃப்ரிடியின் கூற்றுப்படி அவரது அதிகாரப்பூர்வ வயதை விட 5 வயது அதிகம். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் 1980ம் ஆண்டு பிறந்ததாக உள்ளது. ஆனால் தனது சுயசரிதையில் 1975ம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகில் தனது பரம எதிரியான காம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார் அஃப்ரிடி. அஃப்ரிடியும் காம்பீரும் களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் முட்டி மோதுவதை வழக்கமாக கொண்டவர்கள். 

afridi remained the clash between gambhir in 2007

சமூக வலைதளங்களிலும் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2007ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அஃப்ரிடியும் காம்பீரும் மோதிக்கொண்டவது, களத்தில் நடந்த சண்டைகளில் முக்கியமான ஒன்று. 

இந்நிலையில், தனது சுயசரிதையில் காம்பீர் குறித்து எழுதியுள்ள அஃப்ரிடி, காம்பீரின் அணுகுமுறைதான் பெரிய பிரச்னை. அவர் நல்ல பெர்சனாலிட்டி இல்லை. கிரிக்கெட்டில் பெரிய ரெக்கார்டும் வைத்திருக்கவில்லை; ஆனால் அணுகுமுறை மட்டும் ஆக்ரோஷமாக இருக்கும். தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு அப்படித்தான் நடந்துகொள்வார். 

afridi remained the clash between gambhir in 2007

2007 ஆசிய கோப்பை போட்டியில் நேராக என்னை நோக்கி ஓடிவந்து வேண்டுமென்றே என் மீது மோதினார். அப்போது இருவருமே மாறி மாறி திட்டிக்கொண்டோம். காம்பீர் மனதுக்குள் பிராட்மேனும் ஜேம்ஸ் பாண்டும் கலந்த கலவை என்ற நினைப்பு உள்ளது. எனக்கு நேர்மறையான நபர்களை பிடிக்கும். ஆக்ரோஷமாகவோ போட்டி மனப்பான்மையுடனோ இருப்பதில் தவறில்லை; ஆனால் நேர்மறையான நபராக இருக்க வேண்டும். காம்பீர் அப்படிப்பட்டவர் அல்ல. காம்பீர் ஒரு சிடுமூஞ்சி என்று அஃப்ரிடி தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios