உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷின்வாரி சேர்க்கப்பட்டுள்ளார். சேஸாய் நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ரஹ்மத் ஷா, கேப்டன் குல்பாதின் நைபுடன் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், முகமது சைஃபுதீன், மெஹிடி ஹாசன், மஷ்ரஃபே மோர்டஸா(கேப்டன்), முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

ஆஃப்கானிஸ்தான் அணி:

குல்பாதின் நைப்(கேப்டன்), ரஹ்மத் ஷா, ஷாஹிடி, அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஜட்ரான், ஷின்வாரி, இக்ரம் அலி கில்(விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், ஜட்ரான், முஜீபுர் ரஹ்மான்.