ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்த 4 அணிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டபடியால் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நாளைய சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இதையும் படிங்க - ஹர்பஜன், உங்களுக்கு அவங்க 2 பேரையும் எடுக்கலைங்குறது பிரச்னையா? இல்ல அஷ்வினை எடுத்தது பிரச்னையா?

இன்றைய போட்டியில், ஏற்கனவே இந்த தொடரைவிட்டு வெளியேறிவிட்ட, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போகாத உப்புச்சப்பில்லாத போட்டியில் இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய மூவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அக்ஸர் படேல் ஆகிய மூவரும் ஆடுகின்றனர்.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங். 

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), கரிம் ஜனத், ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், ஃபரீத் அகமது, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.