சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும், நடிகர் வெங்கடேஷ் ஹைதராபாத் அணியின் கொடியை வைத்துக் கொண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்து போட்டியை ரசித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெடுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 35 ரன்களும் எடுத்தனர்.

Scroll to load tweet…

பின்னர், 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. இதில் இம்பேக்ட் பிளேயராக டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். போட்டியின் 2ஆவது ஓவரை சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயர் முகேஷ் சவுத்ரி வீசினார். அந்த ஓவரில் மட்டும் அபிஷேக் சர்மா 4, 0, 6, 0, 6, நோபால் + 6, 6, 4 என்று மொத்தமாக 27 ரன்கள் குவித்தார். 3ஆவது ஓவரையும் எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, 6, 4 என்று அடித்த நிலையில் தீபக் சஹார் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 12 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Scroll to load tweet…

அவர் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நடிகர் வெங்கடேஷ் ஹைதராபாத் கொடியசைத்து ஆரவாரம் செய்தார். மேலும், ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி என்பதால் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்துடன் இணைந்து இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போன்று தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் சிஎஸ்கே மற்றும் எஸ்.ஆர்.ஹெச் போட்டியை நேரில் வந்து கண்டு ரசித்துள்ளார்.

டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் வெளியேற, எய்டன் மார்க்ரம் நிதானமாக விளையாடி ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து சிஎஸ்கெ வரும் 8 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சிஎஸ்கே அணியில் மொயீன் அலி 2 விக்கெட்டும், மகீஷ் தீக்‌ஷனா மற்றும் தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

Scroll to load tweet…