தற்போதைய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் நிறைய பேர் இல்லை என்றும் 1990கள் மற்றும் 2000கள் காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டதாகவும் கூறுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொன்னார் ரசாக்.

அதில், சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் குறித்தும் பேசினார். கோலி மற்றும் பும்ரா குறித்து பேசிய அப்துல் ரசாக், 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆடிய வீரர்களிடம் கேளுங்கள்.. உண்மையான கிரிக்கெட் என்றால் என்னவென்று அவர்கள் சொல்லுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் பல தலைசிறந்த வீரர்கள் ஆடினார்கள். இப்போதெல்லாம் அந்தளவிற்கு உலகத்தரமான நிறைய வீரர்கள் கிடையாது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலுமே டெப்த் கிடையாது. எல்லாமே அடிப்படை லெவலில்தான் உள்ளது. 

எனக்கு பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்வது பெரிய விஷயமே கிடையாது. பும்ராவின் பவுலிங்கை நான் எதிர்கொண்டால், பும்ரா உண்மையான அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணர்வார். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், மெக்ராத், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பவுலர்களை எதிர்கொண்டால், பேட்ஸ்மேனுக்கு தானாகவே நம்பிக்கை அதிகரித்துவிடும். எனவே எனக்கெல்லாம் பும்ரா குழந்தை பவுலர். அவர் மீது என்னால் எளிதாக ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியும் என்று அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகக்ரள், அப்துல் ரசாக்கை கடுமையாக கிண்டலடித்து பதிலடி கொடுத்தனர். 2011 உலக கோப்பை அரையிறுதியில் முனாஃப் படேலின் பவுலிங்கில் ரசாக் போல்டான வீடியோவை ஷேன் செய்து 110 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்தைய அடிக்க முடியல.. இவரு பும்ராவுக்கு பயம் காட்டுவாராம் என்றும் ஆடிய காலத்திலேயே ஒண்ணும் முடியல.. இதுல இப்பதான் வந்து இவரு கழட்டப்போறாரு என்றும் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். 

சர்ச்சை கருத்துக்கு பெயர்போன அப்துல் ரசாக், பும்ராவை விமர்சித்து வாங்கி கட்டிக்கொண்டார். இந்நிலையில், பும்ரா குறித்த தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார் ரசாக். 

இதுகுறித்து பேசிய அப்துல் ரசாக், பும்ராவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்லவில்லை. க்ளென் மெக்ராத், வாசிம் அக்ரம், ஆம்ப்ரூஸ், அக்தர் ஆகியோருடன் ஒப்பிட்டு கருத்து கூறினேன். அவர்களது பவுலிங்கை எதிர்கொள்வது கடினம் என்று கூறுவதற்காக அப்படி சொன்னேன். எனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. பும்ரா உலகின் தலைசிறந்த பவுலராக உருவெடுத்துவருகிறார். ஆனால் எங்கள் காலத்து பவுலர்களின் திறமை வேற லெவல். அவர்களை எதிர்கொள்வது கடினம். இப்போதைய ஆடுகளங்கள் எல்லாம் படுமோசம். 10-15 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிரிக்கெட் வீரர்களை போல நாம் இப்போது யாரையும் தயார் செய்வதில்லை என்று ரசாக் கூறியிருக்கிறார்.

பும்ராவின் பவுலிங்கை நான் அடித்து நொறுக்கிவிடுவேன். அவர்லாம் எனக்கு அசால்ட்டு என்று கூறிவிட்டு, இப்போது சரணடைந்திருக்கிறார் ரசாக்.